/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதியின்றி கூட்டம் கூடியதாக 400 அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
/
அனுமதியின்றி கூட்டம் கூடியதாக 400 அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
அனுமதியின்றி கூட்டம் கூடியதாக 400 அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
அனுமதியின்றி கூட்டம் கூடியதாக 400 அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2024 01:32 AM
கரூர், அனுமதியில்லாமல் கூட்டம் கூடியதாக, அ.தி.மு.க.,வினர் 400 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூரில் நில மோசடி வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து, திருச்சி மத்திய சிறையிலிருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னில், அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணாதுரை ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது, ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.
அனுமதி பெறாமல் கூட்டம் கூடியதாக, விஜயபாஸ்கர், அ.தி.மு.க., அவை தலைவர் திருவிகா மற்றும் 50 பெண்கள் உள்பட, 400 பேர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.