/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காவிரி வளைவு, பழமை வாய்ந்த சங்கு ஊதும் கட்டடம் அகற்றம்
/
காவிரி வளைவு, பழமை வாய்ந்த சங்கு ஊதும் கட்டடம் அகற்றம்
காவிரி வளைவு, பழமை வாய்ந்த சங்கு ஊதும் கட்டடம் அகற்றம்
காவிரி வளைவு, பழமை வாய்ந்த சங்கு ஊதும் கட்டடம் அகற்றம்
ADDED : ஆக 29, 2024 02:04 AM
குளித்தலை, ஆக. 29-
குளித்தலை, காந்தி சிலை அருகில் உள்ள நகராட்சியின் சுங்கு ஊதும் கட்டடம், 50 ஆண்டுகளுக்கு மேலாக நகரம் மற்றும் கிராம பகுதி பொது மக்கள் பயன் தரும் வகையில் அதிகாலை, காலை, மதியம், மாலை என நான்கு நேரங்களில் சங்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், சங்கு ஊதும் கட்டடத்தை, நேற்று மதியம் தொழிலாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் நந்தகுமார் கூறுகையில்,'' நகராட்சி பகுதியில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக, பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள சங்கு ஊதும் கட்டடம் மற்றும் காவிரி நகரில் உள்ள வளைவு அகற்ற ஏற்கனவே நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி சங்கு ஊதும் கட்டடம்
அடியோடு அகற்றும் பணி நடைபெறுகிறது. இதேபோல், காவிரி நகர் வளைவு அகற்றப்படுகிறது,'' என்றார்.