/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
/
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 29, 2024 03:10 AM
கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) கரூர் வட்ட கிளை சார்பில், கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கேங்மேன் ஊர் மாற்றம், கள உதவியாளர் பணிமாற்றம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தை குழுவை அமைக்க வேண்டும், குடும்ப நலநிதியாக, ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டும், பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், கிளை செயலாளர் தனபால், பொருளாளர் நெடுமாறன், சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் ஜீவானந்தம், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.