/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
/
கரூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ADDED : ஆக 07, 2024 01:46 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மத்திய மண்டல போலீஸ் சரகத்தில், நேற்று முன்தினம் இரவு, 47 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி, கரூர் ரூரல் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடை யார் கோவில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், உளவு பிரிவுக்கும், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, குளித்தலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகம் இன்ஸ்பெக்டர் கோபி, அரவக்குறிச்சி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், அரவக்குறிச்சி போலீஸ் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் நந்த
குமார், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும் மாற்றப் பட்டனர்.
அதேபோல், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி, கரூர் ரூரல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருச்சி மாவட்டம், லால்குடி சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கரூர் லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருச்சி மாநகரம் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி, கரூர் சைபர் கிரைம் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
பெரம்பலுார் மகளிர் போலீஸ் இன்பெக்டர் பேபி, கரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், புதுக்கோட்டை மது
விலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், கரூர் மாவட்டம், தோகமலை சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருச்சி ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், கரூர் மாவட்டம், பாலவிடுதி சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.