/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிறந்ததும் இறந்த குழந்தை போலீசார் விசாரணை
/
பிறந்ததும் இறந்த குழந்தை போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 04, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, ஆண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில், உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
கரூர் மாவட்டம், வாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமராஜ் என்பவரது மனைவி கல்பனா, 28; இவருக்கு கடந்த, 1ல் இரவு வாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தைக்கு திடீ-ரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டது.
ஆனால், செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்-தது. இதுகுறித்து, குழந்தையின் தந்தை ராமராஜ், 32; கொடுத்த புகாரின்படி, வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.