/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி அருகே சேவல் சண்டை: ஆறு பேர் கைது
/
க.பரமத்தி அருகே சேவல் சண்டை: ஆறு பேர் கைது
ADDED : ஜூலை 20, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;க.பரமத்தி அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பொன்னாவரம் பகுதியில், நேற்று சேவல் சண்டை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, க.பரமத்தி போலீசார் பொன்னாவரம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சேவல் சண்டை நடத்தியதாக முருகேசன், 35; மற்றொரு முருகேசன், 29; பிரேம்குமார், 24; சத்தியராஜ், 21; ராஜேஷ் குமார், 35; ராஜ், 60; ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பாலு, பூபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.மேலும், அவர்களிடமிருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள், 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.