/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டவன் கோவிலில் மாடு மாலை தாண்டும் விழா
/
பட்டவன் கோவிலில் மாடு மாலை தாண்டும் விழா
ADDED : ஜூன் 14, 2024 01:08 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த கடவூர் சுக்காம்பட்டியில் பட்டவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா, கடந்த, 4ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அன்று முதல், 9 நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து பட்டவன் சுவாமிக்கு, மூன்று கால சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். முதல் நாள் திருவிழாவில், பட்டவன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வாண வேடிக்கையுடன் சிறப்பு பூஜை செய்தனர். 2ம் நாள், பொங்கல் வைத்து பட்டவனுக்கு படைத்து வழிபட்டனர். 3ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.