/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன வாய்க்கால் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலம் சேதம்
/
பாசன வாய்க்கால் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலம் சேதம்
பாசன வாய்க்கால் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலம் சேதம்
பாசன வாய்க்கால் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலம் சேதம்
ADDED : ஏப் 06, 2024 03:53 AM
கரூர்: கரூர் அருகே, பாசன வாய்க்கால் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலம், சேதம் அடைந்துள்ளது.
கரூர்-சேலம் பழைய சாலையின் குறுக்கே, வெங்கமேட்டில் அமராவதி ஆற்றின் பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. மழைக்காலம் மற்றும் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது, வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் சாலையில் ஓடும். அப்போது, வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.
இதனால், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் மேல் உள்ள, பழைய பாலத்தை அகற்றி விட்டு, புதிதாக பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த, அ.தி.மு. க., ஆட்சியின் போது, அமராவதி கிளை பாசன வாய்க்கால் மீது, புதிதாக பாலம் கட்டப்பட்டு, தார் சாலையும் அமைக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் எளிதாக சென்றன. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில், இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதை உடனடியாக சரி செய்யாத பட்சத்தில், பாலம் இடிந்து விழும் நிலையில், போக்கு
வரத்து பாதிப்பு ஏற்படும். எனவே, புதிய பாலத்தில் ஏற்பட்டுள்ள, சேதத்தை உடனடியாக சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

