/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் நீட்டிய நிலையில் கம்பிகள் காத்திருக்கும் விபத்து அபாயம்
/
சாலையில் நீட்டிய நிலையில் கம்பிகள் காத்திருக்கும் விபத்து அபாயம்
சாலையில் நீட்டிய நிலையில் கம்பிகள் காத்திருக்கும் விபத்து அபாயம்
சாலையில் நீட்டிய நிலையில் கம்பிகள் காத்திருக்கும் விபத்து அபாயம்
ADDED : ஆக 27, 2024 03:01 AM
கரூர்: கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையில் நீட்டிய நிலையில் கம்பிகள் உள்ளன. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் காத்திருக்கிறது.
கரூர் மாநகராட்சி, வெங்கமேடு காமதேனு நகர் முதல் வாங்கல் சாலை வரை, சமீபத்தில் புதிதாக தார்ச்சாலை மற்றும் இரண்டு பக்கமும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்தது. தற்போது, மழை நீர் வடிகாலின் மேல் பகுதியில், ஒரு பக்கம் சிமென்ட் தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வாங்கல் சாலை நுழைவு பகுதியில், மழைநீர் வடிகால் மேல் பகுதியில், நீட்டிய நிலையில் கம்பிகள் காணப்படுகின்றன.இதனால், வெங்கமேடு காமதேனு நகர்-வாங்கல் சாலையில் செல்லும், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால், நீட்டிய நிலையில் உள்ள கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.