/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதி கோரி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2024 03:01 AM
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் பவித்திரத்தில், அடிப்-படை வசதிகளை செய்து தரக்கோரி மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். இங்கு சாலை வசதி, மின்விளக்கு, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி, இலவச வீட்டு மனை பட்டா, மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனடியாக செய்து தர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின், பஞ்-சாயத்து தலைவரிடம் சென்று மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ராஜாமுகமது, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.