/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 18, 2024 03:02 AM
கரூர்: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமையில், அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நேற்று காலை ஆர்ப்-பாட்டம் நடந்தது.
அதில், மேற்குவங்க மாநிலத்தில் பி.ஜி., மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்-டித்தும், மருத்துவ ஊழியர்கள் மீதான தாக்குதலை தடுக்க சிறப்பு சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்ட டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, கொலை செய்யப்பட்ட பி.ஜி., மருத்துவருக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்-பட்டது.

