/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இசைப்பள்ளியில் தேவராட்டம், கரகாட்டம்; கலெக்டர் தகவல்
/
இசைப்பள்ளியில் தேவராட்டம், கரகாட்டம்; கலெக்டர் தகவல்
இசைப்பள்ளியில் தேவராட்டம், கரகாட்டம்; கலெக்டர் தகவல்
இசைப்பள்ளியில் தேவராட்டம், கரகாட்டம்; கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 10, 2024 06:52 AM
கரூர்: கரூர் அரசு இசைப்பள்ளியில் தேவராட்டம், கரகாட்டம் ஆகிய கிராமிய கலைப்பயிற்சி நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தேவராட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகிய கலைகளில் வாரம் இரண்டு நாட்கள் (வெள்ளி மற்றும் சனி) மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை கிராமிய கலைப்பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
ஓராண்டு பயிற்சிக்கு பின், அரசு தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். 17 வயதுக்கு மேற்பட்டுள்ளவர்கள் சேரலாம். குறைந்தபட்சம், 8 ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. 8 ம் வகுப்புக்கு குறைவான கல்வி தகுதி உடையவர்களும் சேரலாம். ஆனால் தேர்வுக்கு அனுப்ப இயலாது, சான்றிதழ் கிடைக்காது. ஜூலை 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. வரும், 12 முதல் வகுப்புகள் தொடங்குகிறது. மேலும் தகவல் பெற, பொறுப்பாளர் ஜெயராஜை, 9865036825 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.