/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடிப்பெருக்கு விழாவில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
/
ஆடிப்பெருக்கு விழாவில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஆக 04, 2024 01:37 AM
கரூர், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் அம்மன் கோவில்களில், பொதுமக்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுதும், நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்தில், வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், காவிரியாற்று பகுதிகளில், வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், வெங்கடரமண சுவாமி கோவில், வாங்கலம்மன் கோவில், தான்தோன்றிமலை காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில் வெண்ணைமலை, புகழூர், பவித்திரம் பகுதிகளில் உள்ள, பால சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும், ஆடிப்பெருக்கையொட்டி பக்தர்கள் வரிசையில் நின்று, தீபம் ஏற்றி சுவாமி வழிபட்டனர்.
கரூர் பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் கோவிலில், மூலவர் அம்மன் சமயபுரம் மாரியம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.