/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., நிர்வாகியை தாக்கிய பஞ்., துணைத் தலைவர் கைது
/
தி.மு.க., நிர்வாகியை தாக்கிய பஞ்., துணைத் தலைவர் கைது
தி.மு.க., நிர்வாகியை தாக்கிய பஞ்., துணைத் தலைவர் கைது
தி.மு.க., நிர்வாகியை தாக்கிய பஞ்., துணைத் தலைவர் கைது
ADDED : ஆக 30, 2024 05:01 AM
கரூர்: தி.மு.க., நிர்வாகியை தாக்கியதாக, வெள்ளியணை பஞ்., துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் தி.மு.க., கிளை செயலாளர் லோகநாதன். இவர் வீட்டின் அருகே, அவருக்கு சொந்தமான பட்டா நிலம் இருப்பதால், சிமென்ட் சாலை போட வேண்டாம் என ஒப்பந்ததாரரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், வெள்ளியணை பஞ்., துணைத்தலைவர் சிவகுமார், லோகநாதனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் லோகநாதனை ஆத்திமடைந்து, சிவக்குமார் தாக்கியதாக தெரிகிறது. லோகநாதன் அளித்த புகார்படி, துணைத் தலைவர் சிவக்குமாரை வெள்ளியணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.