/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பருவ மழை தொடங்கும் முன் கோவக்குளத்தை துார்வாரலாமே
/
பருவ மழை தொடங்கும் முன் கோவக்குளத்தை துார்வாரலாமே
ADDED : ஜூலை 12, 2024 01:17 AM
கரூர், பருவ மழை தொடங்கும் முன், கோவக்குளத்தை துார் வார வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட கோவக்குளத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. பொதுப்
பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்திற்கு, அதிகப்படியான மழை பெய்யும்போது சேங்கல், முனையனுார், உப்பிடமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து சேரும்.
இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தால், சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட, 250 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இதை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்வர்.
இந்தாண்டு, இங்கு போதிய அளவு மழை இல்லாததால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. பருவ மழை பெய்தால், குளத்திற்கு அதிகளவில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. இருப்பினும், குளத்தை துார் வாரி பல ஆண்டுகள் ஆவதால் குளம் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது.
தண்ணீரை சேமிக்கும் வகையில், குளத்தில் உள்ள புதர்களை அகற்றினால் தண்ணீர் தேங்கி நிற்க வசதியாக இருக்கும். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கோவக்குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.