ADDED : மே 02, 2024 11:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை: கரூர்-திருச்சி பழைய சாலை தொழிற்பேட்டை பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதம் அடைந்துள்ளது. மேலும் தொட்டியை சுற்றி, வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகி ன்றனர். போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைப்பதோடு, வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

