/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்: மாநகராட்சி அதிகாரிகள் 'கொர்'
/
கரூரில் குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்: மாநகராட்சி அதிகாரிகள் 'கொர்'
கரூரில் குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்: மாநகராட்சி அதிகாரிகள் 'கொர்'
கரூரில் குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்: மாநகராட்சி அதிகாரிகள் 'கொர்'
ADDED : மே 04, 2024 09:56 AM
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. அதற்காக, காவிரியாற்றில், வாங்கல், கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையங்கள் மூலம், தண்ணீர் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பிறகு, குழாய் மூலம் பொது குழாய் மற்றும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. புதிய குடிநீர் திட்டத்தின்படி, பழைய கரூர் மாநகராட்சி, பழைய தான்தோன்றிமலை மாநகராட்சி பகுதி களில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இனாம் கரூர் பகுதி யில், குடிநீர் திட்டப்பணி நிறைவு பெறாமல் இழுபறியாக உள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கரூர் மாநகராட்சி பகுதியில், சப்ளை செய்யப்படுகிறது. நேற்று காலை, கரூர் மாநகராட்சி பசுபதிபுரம், வேம்பு மாரியம்மன் கோவில் அருகே, குழாய் உடைந்து பல மணி நேரம், குடிநீர் சாலையில் ஓடியது.
கரூர் மாநகராட்சி பகுதியில், குறைந்தப்பட்சம், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் நாட்களில் மட்டும், தண்ணீர் சாலையில் செல்வதால், மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை கண்டு கொள்வது இல்லை.
மேலும், பொதுக்குழாய்களிலும், உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கரூர் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் வீணாகி வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக் குறை ஏற்படாத வகையில், கரூர் மாநகராட்சி பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை, உடனடியாக சரி செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.