ADDED : ஆக 14, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சார்பில், மக்கள் கூடும் கடைவீதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இதில், போதைப்பொருள் பயன்பாடு தவிர்த்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பஞ்சப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இப்பணிகளில் லாலாப்பேட்டை போலீசார் ஈடுபட்டனர்.