/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற இ.கம்யூ., கட்சியினர்
/
கரூரில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற இ.கம்யூ., கட்சியினர்
கரூரில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற இ.கம்யூ., கட்சியினர்
கரூரில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற இ.கம்யூ., கட்சியினர்
ADDED : ஆக 11, 2024 01:54 AM
கரூர்:கரூரில், குற்றவியல் சட்ட நகல்களை, இ.கம்யூ., கட்சியினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. பிறகு, மூன்று குற்றவியல் நடைமுறை சட்ட நகல்களை, இ.கம்யூ., கட்சியினர் திடீரென எரிக்க முயன்றனர்.
அப்போது, பாதுகாப்புக்காக நின்றிருந்த, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார், இ.கம்யூ.,வினரை புதிய குற்றவியல் நடை முறை சட்ட நகல்களை எரிக்க விடாமல் தடுத்தனர். இதனால், கரூர் தலைமை தபால் நிலையம் முன், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் சண்முகம், மோகன்குமார், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் வடிவேலன், கலாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.