/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
கோவில் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 04, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் பணியாளர்களுக்கான இலவச முழு உடல் பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஷோபா தொடங்கி வைத்தார்.
தனியார் மருத்துவ குழுவினர், 250க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்தனர். மேலும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். நோய் தீவிரம் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்கள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். செயல் அலுவலர் சரணவனன் உள்பட பலர் பங்கேற்றனர்.