/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநுால்'
/
'பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநுால்'
ADDED : ஜூன் 14, 2024 01:05 AM
கரூர், முதல் நாளே மாணவர்களுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படுகிறது' என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு சார்பில் காலை உணவு திட்டத்தால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இத்திட்டம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடுகளை வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பாடநூல்களும், அனைத்து வகையான குறிப்பேடுகளும், ஓவிய பயிற்சிக்கான கையேடு, தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்து பயிற்சிக்கான கையேடுகளையும் வழங்கி உள்ளது. 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கும் தேவையான தமிழ் மற்றும் ஆங்கில வழி முதல் தொகுப்பு இரண்டாம் தொகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும், 751 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, 38,812 மாணவ, மாணவியருக்கு, 6 முதல், பிளஸ் 2 வரை 130 பள்ளிகள் பட புத்தகம் கல்வி உபகரணம் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறியுள்ளார்.