ADDED : செப் 30, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்-ளியில், என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் துவங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், முகாமை துவக்கி வைத்தார்.
என்.எஸ்.எஸ்., திட்ட முகாமில் மரக்கன்று நடுதல், ஆலய உழவாரப்பணி, சாலை மேம்பாடு பணி, பள்ளி வளாகத்தை துாய்மை செய்தல், மழை நீர் சேகரிப்பு அமைத்தல் உள்ளிட்ட கள பணிகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், மழைக்காலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு, உயர்-கல்வி வழிகாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்-தன. முகாமில், முதுகலை ஆசிரியர்கள் ராஜசே-கரன், தமிழ் பொன்னி, திருமுருகன், மணி-கண்டன், செந்தில்வேலவன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுகன்யா, உதவி திட்ட அலுவலர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
