ADDED : செப் 30, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
குளித்தலை; குளித்தலை அடுத்த பெருமாள்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பன், 55; இவரது மகள் கோமதி, 29. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மறவனுாரை சேர்ந்த ஏழுமலை என்பவ-ருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
இந்நி-லையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதேபோல் ஏற்பட்ட தகராறில், கோமதி கோபித்துக் கொண்டு, கடந்த, மூன்று மாதமாக தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 22ல் வீட்டில் இருந்த கோமதியை திடீரென காணவில்லை. எங்கு விசாரித்தும் தகவல் கிடைக்காததால், காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு, கருப்பன் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
