/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தரமற்ற கலவையால் சிதறிய ஜல்லி வாகன ஓட்டிகள் சறுக்கும் அபாயம்
/
தரமற்ற கலவையால் சிதறிய ஜல்லி வாகன ஓட்டிகள் சறுக்கும் அபாயம்
தரமற்ற கலவையால் சிதறிய ஜல்லி வாகன ஓட்டிகள் சறுக்கும் அபாயம்
தரமற்ற கலவையால் சிதறிய ஜல்லி வாகன ஓட்டிகள் சறுக்கும் அபாயம்
ADDED : செப் 09, 2024 07:32 AM
கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலம் - வாங்கல் சாலையில், பல இடங்களில் சமீபத்தில், சாலையின் குறுக்கே, சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில், புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டது.
சிறுபாலத்தின் இரண்டு இணைப்பு பகுதிகளில், இணைப்பு சாலையும் போடப்பட்டது. அதில், பல இடங்களில் இணைப்பு சாலை தரமற்ற சிமென்ட் கலவையால் போடப்பட்டதால், சமீபத்தில் பெய்த மழையில் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற சிமெண்ட் கலவையே காரணம் என, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தெரிவித்தனர்.
எனவே, மண்மங்கலம் - வாங்கல் சாலையில், சிறுபாலம் கட்டப்படும் இடங்களில், இணைப்பு சாலை அமைக்க, தரத்துடன் சிமென்ட் கலவை பயன்படுத்தபடுகிறதா என, அரசுத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.