டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 தேர்வு இணைய வழியில் பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 தேர்வு இணைய வழியில் பயிற்சி
ADDED : நவ 13, 2026 06:43 AM
கரூர்:மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 தேர்வுக்கான பயிற்சி இணைய வழியில் நடக்கிறது என, கலெக்டர் பிரசன்னா ராமசாமி தெரிவித்தார்.
இது
குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின்
வாயிலாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக
நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4
போட்டி தேர்விற்கு இலவச தேர்வு இணைய வழியில் பயிற்சி வகுப்பு
தொடங்கப்பட்ட நிலையில், வரும் ஜன.,3ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு,
https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு
செய்து செய்யலாம். மேலும் 'க்யூ ஆர்' கோட்டை பயன்படுத்தியும் பதிவு
செய்து கொள்ளலாம். இத்தேர்வு தொடர்பான விபரங்களுக்கு, 04324
-223555, 63830 50010, 63743 19939 என்ற மொபைல் எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
