ADDED : நவ 13, 2026 06:44 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த விமல்ராஜ், நிர்வாக காரணங்களுக்காக
அண்மையில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு
பதிலாக, சென்னையில் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த தங்கவேல், கரூர்
மாவட்டத்தின் புதிய டி.ஆர்.ஓ.,-வாக நியமிக்கப்பட்டார். நேற்று
முன்தினம் இவர் கரூர் கலெக்டர் அலுவலகம் சென்று, பொறுப்பேற்றுக்
கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்ற அவருக்கு பல்வேறு துறை உயர்
அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரில் சந்தித்து
வாழ்த்து தெரிவித்தனர்.
