/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கைம்பெண்கள் நலவாரியம் இணையத்தில் பதிய அழைப்பு
/
கைம்பெண்கள் நலவாரியம் இணையத்தில் பதிய அழைப்பு
ADDED : செப் 09, 2024 07:23 AM
கரூர்: 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரிய உறுப்பினராக சேர, இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கான, 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம்' அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது விபரங்களை பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம்.
உறுப்பினராக பதிவு செய்பவர்களுக்கு, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம், 50,000 ரூபாய்- போன்ற இன்னபிற உதவிகளை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.