/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
/
அரவக்குறிச்சியில் கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
அரவக்குறிச்சியில் கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
அரவக்குறிச்சியில் கனமழை வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
ADDED : மே 17, 2024 02:24 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்ததால், பள்ளப்பட்டி கணக்குப்பிள்ளை தெரு பகுதி யில், வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள்
அவதிப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், க.பரமத்தி, வேலாயுதம்
பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதில் பள்ளப்பட்டியில் உள்ள கணக்குப்பிள்ளை தெரு தாழ்வான பகுதி என்பதால், கொட்டி தீர்த்த மழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து, வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மழை நீரை வெளியேற்ற, நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.