ADDED : செப் 06, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணவன் மாயம்: மனைவி புகார்
குளித்தலை, செப். 6-
குளித்தலை அடுத்த, கடவூர் இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த விமலா, 22, கூலித் தொழிலாளி, இவரது கணவர் காளிமுத்து, 32. இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆக.,31 இரவு வீட்டில் துாங்கிய காளிமுத்து மறுநாள் பார்த்தபோது காணவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தன் கணவரை காணவில்லை என, விமலா கொடுத்த புகார்படி பாலவிடுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.