/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண் எஸ்.பி., மீது ஆபாச தாக்குதல்: கரூர் எம்.பி., ஜோதி-மணி கண்டனம்
/
பெண் எஸ்.பி., மீது ஆபாச தாக்குதல்: கரூர் எம்.பி., ஜோதி-மணி கண்டனம்
பெண் எஸ்.பி., மீது ஆபாச தாக்குதல்: கரூர் எம்.பி., ஜோதி-மணி கண்டனம்
பெண் எஸ்.பி., மீது ஆபாச தாக்குதல்: கரூர் எம்.பி., ஜோதி-மணி கண்டனம்
ADDED : ஆக 19, 2024 03:10 AM
கரூர : 'புதுக்கோட்டை எஸ்.பி., உள்பட பெண்களின் மீதான ஆபாச தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்' என, கரூர் எம்.பி., ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டிருப்பதா-வது:
புதுக்கோட்டை எஸ்.பி., வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமூக வலைதளத்தில் ஆபாசமான, அறுவெ-றுக்கத்தக்க பதிவுகளை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஒரு பெண் போலீஸ் அதிகாரியை, அவரது கண்ணியத்தை குலைக்கும் வகையில், பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கமோ, பயமோ இல்லாமல் ஆபாசமாக பேசும் துணிச்சல் எப்படி வருகிறது? இதை எப்படி ஒரு நாகரிகமான சட்டத்தின் ஆட்சி நடக்கிற சமூ-கத்தில் அனுமதிக்க முடியும்? ஒரு போலீஸ் அதிகாரிக்கும், அவர் குடும்பத்திற்குமே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன? தமிழக போலீசார், பெண்களின் மீதான இது-போன்ற ஆபாச தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க-வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.