/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கி.புரத்தில் உளுந்து சாகுபடி தீவிரம்
/
கி.புரத்தில் உளுந்து சாகுபடி தீவிரம்
ADDED : மே 01, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, மகிளிபட்டி, அந்தரப்பட்டி, புதுப்பட்டி ஆகிய இடங்களில், விவசாயிகள் பரவலாக உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது, உளுந்து செடிகளின் நடுவே வளர்ந்த களைகள் அகற்றப்பட்டன. கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. செடிகள் வளர்ந்து, பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகின்றன. அறுவடைக்கு பின், ஓரளவு வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.