/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பஸ் ஸ்டாண்ட் கடை ஒதுக்கீட்டில்முறைகேடு: இ.கம்யூ., போஸ்டரால் பரபரப்பு

ADDED : மே 01, 2024 02:12 AM
குளித்தலை;குளித்தலை பகுதியில் முக்கிய இடங்களில், இ.கம்யூ., சார்பில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் சமூக நீதிக்கான ஆட்சி நடத்தும், தமிழக முதல்வரே உடன் நடவடிக்கை எடுத்திடுங்கள். குளித்தலை நகராட்சி பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் ஒதுக்கீட்டில், ஜாதிய பாகுபாட்டுடன் முறைகேடு நடந்துள்ளது. கடைகளை பொது ஏலம் விடாமல், குடும்ப சொத்து போல முறைகேடாக, ஆதிக்க ஜாதியினருக்கு மட்டும் தாரை வார்த்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கடைகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க., நகர்மன்ற தலைவராக உள்ள, குளித்தலை நகராட்சியில் சமூக நீதி எங்கே? முறைகேடுகளை களைந்து அனைத்து கடைகளையும் பொது ஏலம் விடு. குளித்தலை நகராட்சி, உங்கள் குடும்ப சொத்து அல்ல. ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சொத்து அல்ல. இ.கம்யூ., குளித்தலை ஒன்றியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.