ADDED : ஜூலை 01, 2024 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த மாயனுார் காவிரியாறு கதவணையில் இருந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று முன்தினம் முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பழைய கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை பாசன வாய்க்காலில் வந்த தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இந்த தண்ணீரில், சாயப்பட்டறை தொழிற்சாலை கழிவுநீர் கலந்துள்ளது. இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படும். அதனால், தமிழக அரசு, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட காவிரிக்கரையில் செயல்பட்டு வரும் சாயபட்டறை தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும். பொது மக்களுக்கும், விசாயத்திற்கும் பாதுகாப்பான தண்ணீரை, பாசன வாய்க்காலில் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.