/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நுாலகம் அருகில் குப்பை அகற்ற நடவடிக்கை உண்டா
/
நுாலகம் அருகில் குப்பை அகற்ற நடவடிக்கை உண்டா
ADDED : ஜூலை 07, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்;மேட்டு மகாதானபுரம் பகுதியில் நுாலகம் அருகேயுள்ள சாலையில், குப்பை தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டு மகாதானபுரத்தில் பஞ்சாயத்து சார்பில் நுாலகம் கட்டடம் உள்ளது. இதன் அருகில், தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடை அருகில் குப்பை தேங்கி வருவதால், அதிகமான கொசுக்கள் பரவி வருகிறது. இரவு நேரங்களில் கொசுக்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, குப்பையை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.