/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஜூலை 04, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கரூர் மாநகராட்சி பகுதிகளில், 1,200 க்கும் அதிக-மான சாலையோர வியாபாரிகள் உள்ளதாக, கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, முதல் கட்டமாக அடையாள அட்டை வழங்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி நேற்று சாலையோர வியாபாரிகள், 10 பேருக்கு, அடையாள அட்டையை, மாநகராட்சி மேயர் கவிதா வழங்கினார். அப்போது, மாநக-ராட்சி ஆணையாளர் சுதா, நகரமைப்பு அலுவலர் அன்பு உள்பட பலர் உடனிருந்தனர்.