/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காமராஜ் மார்க்கெட் வணிக வளாக பணிகள் நிறைவு; திறப்பு விழாவிற்காக காத்திருப்பு
/
காமராஜ் மார்க்கெட் வணிக வளாக பணிகள் நிறைவு; திறப்பு விழாவிற்காக காத்திருப்பு
காமராஜ் மார்க்கெட் வணிக வளாக பணிகள் நிறைவு; திறப்பு விழாவிற்காக காத்திருப்பு
காமராஜ் மார்க்கெட் வணிக வளாக பணிகள் நிறைவு; திறப்பு விழாவிற்காக காத்திருப்பு
ADDED : செப் 06, 2024 01:38 AM
காமராஜ் மார்க்கெட் வணிக வளாக பணிகள்
நிறைவு; திறப்பு விழாவிற்காக காத்திருப்பு
கரூர், செப். 6--
கரூர், காமராஜ் தினசரி மார்க்கெட் வணிகவளாக பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவிற்காக, பல மாதங்களாக காத்திருக்கிறது.
கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, காமராஜ் தினசரி மார்க்கெட் கடந்த, 1947ல் அமைக்கப்பட்டது. அதில் உள்ள கட்டடங்கள் சேதம் அடைந்த நிலையில், வியாபாரிகள் புதிய கட்டடம் கட்டி தரும்படி, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். கடந்த 2022 மே, 17ல் 6.75 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதையடுத்து பழைய கடைகள் இடிக்கப்பட்டது. பின், 174 கடைகள் கொண்ட வணிக வளாகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு, கட்டடம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்தது. மளிகை கடை, பழக்கடை, இறைச்சி கடை, டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் அமைய உள்ளது. தற்போது, 99 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழாவிற்கு காத்திருப்பதால், ஒரு சதவீதம் பணிகள் முடிக்காமல் இழுத்
தடிப்பு செய்து வருகின்றனர்.
இது குறித்து, கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக செயலாளர் வெங்கட்ராமன் கூறுகையில், ''கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் வணிக வளாகம் இடிக்கப்பட்டு விட்டதால், பல இடங்களில் தரை கடைகளாக பரவி கிடக்கிறது. இதனால், கடும் போக்கு
வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காமராஜ் மார்க்கெட் புதிய வளாகம் பணிகள் முடிந்து, ஏன் திறக்கவில்லை என்ற காரணம் தெரியவில்லை. உடனடியாக திறந்தால், பல்வேறு சிக்கல் தீர்வதோடு, மாநகராட்சிக்கு வருமானம் வரும்,'' என்றார்.