/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் லோக்சபா தொகுதி 56 வேட்பு மனுக்கள் ஏற்பு
/
கரூர் லோக்சபா தொகுதி 56 வேட்பு மனுக்கள் ஏற்பு
ADDED : மார் 29, 2024 01:02 AM
கரூர்:கரூர் லோக்சபா தொகுதியில், 56 வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன.
கரூர்
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கரூர் லோக்சபா தொகுதி
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல்
முன்னிலையில் நடந்தது. கடந்த, 20 முதல், நேற்று முன்தினம் வரை, கரூர்
லோக்சபா தொகதி வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில், 62 பேர்
வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதில், பா.ஜ.,
வேட்பாளர் செந்தில்நாதன் வேட்பு மனுவில் குற்ற வழக்கு மறைக்கப்பட்டதாக
சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு உரிய விளக்கம்
அளிக்கப்பட்டதை தொடர்ந்து மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.பா.ஜ.,
செந்தில்நாதன், காங்., ஜோதிமணி, அ.தி.மு.க., தங்கவேல், நாம் தமிழர்
கருப்பையா உள்பட 56 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன. மாற்று
வேட்பாளர்கள் உள்பட, 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள்.

