ADDED : ஆக 15, 2024 01:41 AM
கரூர், கரூர் மாவட்ட புதிய எஸ்.பி.,யாக பெரோஸ்கான் அப்துல்லா, நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
கரூர் எஸ்.பி.,யாக இருந்த பிரபாகர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, அரியலுார் எஸ்.பி.,யாக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா, கரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று காலை, கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், புதிய எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, காவல் துறை அதிகாரிகள், எஸ்.பி., அலுவலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து, கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில், இணைய வழி, கணினி வழி குற்றங்கள் தடுக்கப்படும். போலீசார்-பொதுமக்கள் நல்லுணர்வு மேம்படுத்தப்படும், கஞ்சா, குட்கா போதை பொருட்கள் சூதாட்டம் குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் ஸ்டேஷன்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், எஸ்.பி.,யை, 94421-49290 என்ற மொபைல் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.