/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் கொங்கு பள்ளி 100 சதவீத தேர்ச்சி
/
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் கொங்கு பள்ளி 100 சதவீத தேர்ச்சி
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் கொங்கு பள்ளி 100 சதவீத தேர்ச்சி
பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் கொங்கு பள்ளி 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 16, 2024 04:03 AM
கரூர்: பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில், கரூர் வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் மாணவி சுனந்தா, 575 மதிப்பெண்கள், மாணவி சபிதா, 564 மதிப்பெண்ணும், மாணவர் பிரசன்னா, 558 மதிப்பெண்ணும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வில் மாணவர் ஆகாஷ், 478 மதிப்பெண்ணும், மாணவி தனுஸ்ரீ, 477 மதிப்பெண்ணும், மாணவி நிகிலா, 473 மதிப்பெண்ணும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் இப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை, கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, செயலாளர் விசா சண்முகம், பொருளாளர் பிரேம் வீரப்பன், துணைத்
தலைவர் கொங்கு அம்மையப்பன், இணை செயலாளர் ரமேஷ், பள்ளி தாளாளர் பாலு குருசாமி ஆகியோர் பாராட்டினர்.