/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகள்களுக்கு பாலியல் தொல்லை எலக்ட்ரீஷியனுக்கு 'குண்டாஸ்'
/
மகள்களுக்கு பாலியல் தொல்லை எலக்ட்ரீஷியனுக்கு 'குண்டாஸ்'
மகள்களுக்கு பாலியல் தொல்லை எலக்ட்ரீஷியனுக்கு 'குண்டாஸ்'
மகள்களுக்கு பாலியல் தொல்லை எலக்ட்ரீஷியனுக்கு 'குண்டாஸ்'
ADDED : ஆக 29, 2024 02:13 AM
கரூர்:கரூர், ஈரோடு சாலையைச் சேர்ந்த, 45 வயது எலக்ட்ரீஷியனுக்கு 17, 15, 9 வயதில் மகள்கள் உள்ளனர். கடந்த, 2022 முதல், மூன்று மகள்களுக்கும், அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவரது மனைவி பலமுறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. இதனால் அவர், கரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, எலக்ட்ரீஷியனை போக்சோ சட்டத்தில், கடந்த, 3ல் மகளிர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்தார். கலெக்டர் தங்கவேல் நேற்று உத்தரவிட்டார். இதற்கான நகல், எலக்ட்ரீஷியனிடம் நேற்று வழங்கப்பட்டது.