/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
/
பெண் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஆக 30, 2024 01:52 AM
நாமக்கல், ஆக. 30-
பள்ளிப்பாளையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த தறி தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அடுத்த காந்திபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அம்பாயிரம் என்ற அருண்குமார், 38, தறி தொழிலாளி. இவர் கடந்த, 2008ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட, 21 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பெண்ணின் தாய், பள்ளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், அருண்
குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தல் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி முனுசமி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அருண்குமாருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.