/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கல: காய்கறிகள் விலை உயர்வு
/
சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கல: காய்கறிகள் விலை உயர்வு
சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கல: காய்கறிகள் விலை உயர்வு
சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கல: காய்கறிகள் விலை உயர்வு
ADDED : ஜூன் 30, 2024 01:40 AM
கரூர், போதிய மழை இல்லாததால், காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை ஆகிய அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆற்றில் பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்காது என்பதால், கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது. இங்கு விளையும் தக்காளி, வெண்டைக்காய், சுரக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்து, வாரச்சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது போதிய மழை இல்லாததால், தோட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. காய்கறிகளை விதைக்க முடியாத நிலையில் விவசாயிகள் கவலையில் தவிக்கின்றனர்.
ஒரு சிலர் குறைந்த பரப்பிலேயே, காய்கறி பயிரிட்டு, தங்கள் தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொள்கின்றனர். வாரச்சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, நாளுக்கு நாள் காய்கறி விலை அதிகரித்து வருகிறது. மழை பெய்தால் மட்டுமே நிலைமை சீராகி, காய்கறி விலை குறைய வாய்ப்பு உள்ளது.