sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீடுகளில் நடைபெறும் இறப்புகளுக்கு காரணம் கண்டறிவதில் பல இடர்பாடுகள்; கலெக்டர்

/

வீடுகளில் நடைபெறும் இறப்புகளுக்கு காரணம் கண்டறிவதில் பல இடர்பாடுகள்; கலெக்டர்

வீடுகளில் நடைபெறும் இறப்புகளுக்கு காரணம் கண்டறிவதில் பல இடர்பாடுகள்; கலெக்டர்

வீடுகளில் நடைபெறும் இறப்புகளுக்கு காரணம் கண்டறிவதில் பல இடர்பாடுகள்; கலெக்டர்


ADDED : ஜூலை 04, 2024 03:04 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''வீடுகளில் நடைபெறும் இறப்புகளுக்கு, இறப்-பிற்கான சரியான காரணம் கண்டறிவதில் பல இடர்பாடுகள் ஏற்படுகின்றன,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.

கரூரில், டாக்டர்களுக்கு வாய்மொழி கூறாய்வின் மூலம் இறப்புக்கான காரணம் கண்டறிதல் திட்ட பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கிவைத்து பேசியதாவது:

மாவட்ட அளவிலான குடிமை பதிவு முறையில் - இறப்பு பதிவு இறப்புக்கான காரணம் கண்டறிதல் திட்டத்தின் படி பிறப்பு, இறப்பு மற்றும் இறந்து பிறந்தவை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்-டுள்ளது. இறப்பு பதிவின் ஒரு பகுதியாக இறப்புக்-கான காரணம் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகி-றது.

மருத்துவமனைகளில் நடக்கும் இறப்புகளுக்கு டாக்டரால் இறப்புக்கான சான்று வழங்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் நடக்காத இறப்புகளுக்கு, சான்று கட்டணமின்றி வழங்கப்-பட வேண்டும். இறப்புகளை சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரே விசாரணை செய்து இறப்புக்கு முன்னர் இருந்த அறிகுறிகள் அடிப்ப-டையில் இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் மாதம் தோரும், 800 முதல், 900 இறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.இவற்றில் மருத்துவமனைகளில், 300 இறப்புகள், வீடுகளில், 600 இறப்புகள் நடக்கின்றன. மருத்துவமனையில் நிகழும் இறப்புகளுக்கு இறப்பிற்கான காரணம் மருத்துவ அலுவலர்களால் முறையாக வழங்கப்-பட்டு, இ.எம்.ஆர்.ஓ., எனும் மென்பொருள் வாயி-லாக பதிவு செய்யப்படுகிறது. வீடுகளில் நடை-பெறும் இறப்புகளுக்கு இறப்பிற்கான சரியான காரணம் கண்டறிவதில் பல இடர்பாடுகள்

ஏற்படுகின்றன.

இறப்புக்கான காரணம் துல்லியமாக கண்டறியப்-பட்டால், அதனடிப்படையில் மருத்துவ உள்கட்ட-மைப்பு மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்திய அளவில் வீடுகளில் நடக்கும், டாக்டர் கவனிப்பு இல்லாத இறப்புகளுக்கு காரணம் கண்டறிவதில் பெறும் குறைபாடுகள் உள்ளன. இதை கண்டறியும் பொருட்டு உலக சுகாதார நிறுவனம், தேசிய நோய் தொற்றியல் நிறுவனம், சென்னை மருத்துவக்கல்லுாரி ஆகி-யவற்றுடன் இணைந்து பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் களப்பணியா-ளர்கள் மூலம் கரூர் மாவட்டத்தில் முன்னோடி ஆய்வு செய்யதிட்ட மிடப்பட்டுள்ளது.

இதற்காக, மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. ஜனவரி,- 23 முதல் டிசம்பர்,- 23 வரை வரையிலான மருத்துவ காரணம் கண்டறியப்படாத, 5,784 இறப்புகள் வாய்மொழிக் கூறாய்வு நடக்கிறது. அதில், 3,505 இறப்புக்கான மருத்துவ காரணம் கண்டறியும் பணி முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பேசினார்.

டி.ஆர்.ஓ., கண்ணன், மருத்துவ கல்லுாரி டீன் (பொ) ராஜா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சந்தோஷ் குமார் உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us