/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மயான சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் பொது மக்கள் சிரமம்
/
மயான சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் பொது மக்கள் சிரமம்
மயான சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் பொது மக்கள் சிரமம்
மயான சாலை ஒருவழிப்பாதையாக இருப்பதால் பொது மக்கள் சிரமம்
ADDED : ஜூலை 01, 2024 03:31 AM
அரவக்குறிச்சி: வேட்டமங்கலம் மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
வேலாயுதம்பாளையம் அருகே, வேட்டமங்கலம் அருகே வடுகப்பட்டி பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், 700 மீ., தொலைவில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்ல, 700 மீட்டர் துாரத்திற்கு ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. இதனால் கிராமத்தில் ஏதேனும் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்தால்,
சடலத்தை ஒரு வழிப்பாதையில் சுமந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும், மயானத்திற்கு செல்லும் பாதையில் வாய்க்காலில் நீர் தேங்கி இருப்பதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சடலத்தை துாக்கிக்கொண்டு, நான்கு பேர் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து கலெக்டர், அரசு
அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இச்சாலையை சீரமைத்து, மயானத்திற்கு எளிதாக செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.