/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி
/
தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி
ADDED : ஆக 08, 2024 06:55 AM
கரூர் : தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, சிறப்பு கைத்தறி கண்-காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், கரூர் வெங்கமேட்டில் நடந்தது.
இதை தொடங்கி வைத்து கலெக்டர் தங்கவேல் கூறியதாவது: கரூர், சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் கைத்-தறி துணிகள் உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கின்றன. கைத்தறி உற்பத்தியில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக இருப்பதால், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தத்துறை நேரடி தொடர்பை கொண்டுள்ளது. இந்த சிறப்பு கைத்தறி கண்-காட்சியில் கரூர் சரகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சாதா பெட்ஷீட், ஜக்-காடு பெட்ஷீட், துண்டு, தலையணை உறை, காட்டன் புட-வைகள் ஆகியவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர், கூறினார்.
நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ், 15 பயனாளிகளுக்கு, 12.50 லட்சம் ரூபாய் கடன் அனுமதி ஆணைகளையும், 4 பயனாளிக-ளுக்கு சிறிய கைத்தறி குழுமத் திட்டத்தில் கட்டப்பட்டுவரும் தறிக்கூட கட்டுமான பணிகளுக்கு, 2.40 லட்சம் ரூபாய் மதிப்பி-லான அனுமதி ஆணைகள் என, 23 பயனாளிகளுக்கு, 14.90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கைத்தறி உதவி இயக்குநர் சரவணன், துணை இயக்-குநர்(காசநோய்) சரவணன் உள்பட
பலர் பங்கேற்றனர்.