ADDED : ஜூலை 02, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, செல்வந-கரை சேர்ந்தவர்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்-தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் அருகே, சின்ன ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பஞ்., செல்-வநகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்-குள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், மொபைல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. டவர் அமைக்கும் பட்-சத்தில் இப்பகுதி மக்களுக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பறவைகள் மற்றும் உயி-ரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே பரிசீலனை செய்து குடியிருப்பு பகுதியில் அமைய இருக்கும் டவரை நிறுத்தி, வேறு இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.