/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
1 ஏக்கரில் தைல மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசம்
/
1 ஏக்கரில் தைல மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசம்
ADDED : ஏப் 27, 2024 10:11 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே வசித்து வருபவர் திருமூர்த்தி, 45; விவசாயி.
அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில், மூன்று ஏக்கரில், தைல (யூக்கலிப்டஸ்) மரங்களை வளர்த்து வருகிறார். மரங்கள் நன்கு விளைந்து, வெட்டும் தருவாயில் இருந்தன. தைல மரங்களுக்கு இடையே பல்வேறு செடி, கொடிகள் காய்ந்திருந்தன. நேற்று முன்தினம் மாலை, கொளுத்தும் வெயிலில் காய்ந்து கிடந்த செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின.அணைக்க முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை. தீ தைல மரங்களிலும் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். ஆனாலும், ஒரு ஏக்கரில் இருந்த, தைல மரங்கள் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாயாகும். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

