/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளக்காதல் விவகாரம் முதியவர் குத்தி கொலை
/
கள்ளக்காதல் விவகாரம் முதியவர் குத்தி கொலை
ADDED : செப் 03, 2024 02:29 AM
கரூர்: கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி அணைப்புரம் பகுதியைச் சேர்ந்த காசிநாதன், 60. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 53, முதல் மனைவி வனிதா, 45, என்பவருக்கும், 10 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், காசிநாதனுக்கும், ராஜேந்திரனுக்கும் முன் விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு காசிநாதன், டி.வி.எஸ்., ஜூபிடர் மொபட்டில் பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ராஜேந்திரன், அவரது மகன் குரு பிரசாத், நண்பர் மது மோகன் ஆகியோர் காசிநாதனை வழிமறித்தனர். மறைத்து வைத்திருந்த கத்தியால், காசிநாதனை குத்தி, ராஜேந்திரன் கொலை செய்தார்.
கரூர் டவுன் போலீசார், ராஜேந்திரனை கைது செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய ராஜேந்திரனின் மகன் குரு பிரசாத், மது மோகன் ஆகியோரை, கரூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.