/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீரன் சின்னமலை நினைவு நாளில் கொ.ம.தே.க., - போலீசார் தள்ளுமுள்ளு
/
தீரன் சின்னமலை நினைவு நாளில் கொ.ம.தே.க., - போலீசார் தள்ளுமுள்ளு
தீரன் சின்னமலை நினைவு நாளில் கொ.ம.தே.க., - போலீசார் தள்ளுமுள்ளு
தீரன் சின்னமலை நினைவு நாளில் கொ.ம.தே.க., - போலீசார் தள்ளுமுள்ளு
ADDED : ஆக 04, 2024 03:09 AM
கரூர்: கரூரில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள், அனுசரிப்பு நிகழ்ச்சியில் கொ.ம.தே.க.,வினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழகம் முழுதும், நேற்று, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்-னமலையின் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. கரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று காலை, கொ.ம.தே.க., சார்பில் தீரன் சின்னமலை சிலை வைத்து, அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது. அப்போது, கொ.ம.தே.க., தொண்டர்கள் சிலர், டூவீலரில் அதிக சத்தத்துடன், கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், உலா வந்தனர். அவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீசார், தடுத்து நிறுத்தி, டூவீலரில் சத்தம் இல்லாமல், மெதுவாக செல்-லும்படி தெரிவித்தனர். இதையடுத்து, போலீசாருக்கும், கொ.ம.தே.க.,வினருக்கும் இடையே, வாக்குவாதம் மற்றும் தள்-ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர், கொ.ம.தே.க.,வினரிடம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.