/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மீண்டும் பாதாள சாக்கடை உடைப்பு பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
/
மீண்டும் பாதாள சாக்கடை உடைப்பு பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
மீண்டும் பாதாள சாக்கடை உடைப்பு பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
மீண்டும் பாதாள சாக்கடை உடைப்பு பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 18, 2024 03:04 AM
கரூர: கரூர் பழைய நீதிமன்றம் சாலையில் மீண்டும், மீண்டும் பாதாள சாக்கடை உடைந்ததால், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்-ளது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 48 வார்டுகளில், முதல் வார்டு முதல், 32வது வார்டு வரை பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. கரூர் வாங்கல் சாலையில் ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை, அண்ணா வளைவு, கோவை சாலை ஆகிய இடங்களில், பலமுறை பள்ளம் ஏற்பட்டது. பல மாதங்கள் போராடி புதிய குழாய்கள் போடப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டு மூடப்பட்டது.
கடந்த, ஜூன் 7 ல் கரூர் -வாங்கல் சாலை பழைய நீதிமன்றம் அருகே, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரண-மாக, மீண்டும் பள்ளம் விழுந்தது. பாதாள சாக்கடை குழாய் மாற்றுவது உள்ளிட்ட பணிக்காக, மாநகராட்சி சார்பில், 19 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணி நடந்து. ஜூலை, 6ல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
ஒரே நாளில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் சரி செய்யும் பணிகள் நடந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்த பணிகள் முடிந்து, 15 நாட்களுக்கு முன் மீண்டும் போக்கு-வரத்து திறக்கப்பட்டது. அதில் சாலை செப்பனிடாமல் குண்டு, குழியுமாக இருந்தால், நேற்று முன்தினம் மழையில் குளம் போல தண்ணீர் தேங்கி இருந்தது. கரூர் பழயை நீதிமன்றம் சாலை அருகில் அண்ணா வளைவையொட்டி, ஏற்கனவே விழுந்த குழிக்கு அருகில் நேற்று பகல், 2:00 மணிக்கு மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்த சாலையின் இருபுறங்களில் பேரிகார்டு வைத்து அடைக்-கப்பட்டுள்ளது. கரூர் நகரில் வரும் வாகனங்கள் ஆலமர தெரு, கருப்பாயி கோவில் தெரு வழியாக, போக்குவரத்து மாற்றி விடப்-படுள்ளது. கருப்பாயி கோவில் தெருவில் அரசு இசை பள்ளி அருகில் சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவும் பெரி-தானால், இப்பகுதியில் போக்குவரத்து முடக்கும் அபாயம் ஏற்-பட்டுள்ளது.